- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- இந்தியா
- முதல் அமைச்சர்
- சட்டமன்ற உறுப்பினர்
- கே. ஸ்டாலின்
- சென்னை
- தித்வா
- இலங்கை
சென்னை: இந்தியாவிற்கே வழிகாட்டும் நிலையில் தமிழ்நாடு உள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காலநிலை மாற்றத்தின் விளைவுகளை கண்கூடாக பார்க்கிறோம். டிட்வா புயலின் கோரத் தாண்டவத்தை பார்த்தோம். பேரிடரால் இலங்கை உள்ளிட்ட நாடுகள் எப்படி பாதிக்கப்பட்டுள்ளன என்பதை பார்த்தோம். எப்போதாவது புயல் தாக்கும் என்ற நிலையை நாம் தாண்டிவிட்டோம். அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் டிட்வா புயலால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மிக விரைவில் காலநிலை கல்வி அறிவு குறித்த பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. 297 பசுமை பள்ளிகளில் கூல் ரூஃப் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் கூறினார்.
