×

4 கிரிக்கெட் வீரர்கள் அதிரடி சஸ்பெண்ட்

கவுகாத்தி: சையத் முஷ்டாக் அலி டி20 போட்டிகள் தற்போது நடந்து வருகின்றன. இந்நிலையில், முறைகேடான கிரிக்கெட் செயல்பாடுகளில் ஈடுபட்டதாக, அமித் சின்ஹா, இஷான் அகமது, அமான் திரிபாதி, அபிஷேக் தாகுரி ஆகிய 4 பேரை, அசாம் கிரிக்கெட் சங்கம் (ஏசிஏ) சஸ்பெண்ட் செய்துள்ளது இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விசாரணை முடியும் வரை, சஸ்பெண்ட் உத்தரவு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சையத் முஷ்டாக் அலி கிரிக்கெட்டில் அசாமை சேர்ந்த அணி, சூப்பர் லீக் சுற்றுக்கு முன்னேற முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.

 

Tags : Guwahati ,Syed ,Mushtaq ,Ali ,T20 ,Assam Cricket Association ,ACA ,Amit Sinha ,Ishan Ahmed ,Aman Tripathi ,Abhishek Thakur ,
× RELATED 3வது டி20 போட்டியில் இன்று மிரட்டும்...