பாக். உளவு அதிகாரிகளுடன் தொடர்பு மாஜி விமானப்படை அதிகாரி அசாம் மாநிலத்தில் கைது

தேஜ்பூர்: அசாமின் சோனித்பூர் மாவட்டத்தில் ஓய்வு பெற்ற இந்திய விமானப்படை அதிகாரி ஒருவர் பாகிஸ்தானின் உளவுத்துறை அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் முக்கியமான ஆவணங்கள் மற்றும் தகவல்களை சமூக ஊடகங்கள் மூலமாக பாகிஸ்தானின் உளவு அதிகாரிகளுடன் பகிர்ந்து கொண்டது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட அதிகாரி தேஜ்பூரில் உள்ள பாட்டியா பகுதியைச் சேர்ந்த குலேந்திர சர்மா என அடையாளம் காணப்பட்டுள்ளார். குலேந்திர சர்மா ஓய்வு பெறுவதற்கு முன்பு, தேஜ்பூரில் உள்ள விமானப்படைத் தளத்தில் ஜூனியர் வாரண்ட் அதிகாரியாகப் பணியாற்றினார்.

Related Stories: