2001ல் நாடாளுமன்ற தாக்குதலில் உயிரிழந்த பாதுகாப்பு படையினருக்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி அஞ்சலி!!

டெல்லி: 2001ல் நாடாளுமன்ற தாக்குதலில் உயிரிழந்த பாதுகாப்பு படையினருக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். பாதுகாப்பு படையினர் படத்திற்கு பிரதமர் மோடி, குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அஞ்சலி செலுத்தினர். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி -எம்.பி. உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். நாட்டையே உலுக்கிய நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் நடைபெற்று 24 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. 2001ஆம் ஆண்டு, டிசம்பர் 13ஆம் தேதி காலை சுமார் 11.30 மணி அளவில், நாடாளுமன்ற வளாகத்திற்குள் போலியான அடையாள அட்டைகளைக் காட்டி, வெள்ளை நிற அம்பாசிடர் காரில், 5 பேர் கொண்ட பயங்கரவாத கும்பல் பலத்த ஆயுதங்களுடன் நுழைந்து திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்பு நடத்திய தாக்குதலில் 6 பாதுகாப்பு படையினர், 2 நாடாளுமன்ற வளாக பாதுகாவலர்கள் மற்றும் தோட்டப் பணியாளர் என 9 பேர் மரணம் அடைந்தனர்.

இச்சம்பவம் குறித்து அப்போதைய உள்துறை அமைச்சர் எல்.கே.அத்வானி, “நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட இந்த பயங்கரவாத தாக்குதல், பாகிஸ்தானை மையமாகக் கொண்டு, பாகிஸ்தானின் உதவியில் இயங்கும் லக்‌ஷர் ஏ தைய்யிபா, ஜாய்ஷ் ஏ முகம்மது அமைப்பைச் சார்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. இச்சம்பவம் நமது நாட்டின் நீங்கா நினைவுகளுள் ஒன்றாகத் திகழ்கிறது. இந்த நிலையில் தாக்குதல் சம்பவத்தின் 24ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. அதில், மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லா, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, உறுப்பினர்கள் மரியாதை செலுத்தினர்.

Related Stories: