திருப்புத்தூர், டிச.13: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இதன் காரணமாக திருப்புத்தூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களான நெற்குப்பை, தெக்கூர், மாங்குடி, மணக்குடி, காரையூர், கே.வைரவன்பட்டி, ஆத்தங்கரைப்பட்டி, பட்டமங்கலம், கண்டரமாணிக்கம் கண்டவராயன்பட்டி, திருக்கோஷ்டியூர், தானிப்பட்டி, பிள்ளையார்பட்டி, சௌமிய நாராயணபுரம், ரணசிங்கபுரம், திருவிடையாட்பட்டி, கோட்டையிருப்பு, எஸ்.எஸ்.கோட்டை, மண்மேல்பட்டி, நெடுமரம், கீழச்சிவல்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலும் அதிகாலை முதலே தொடர்ந்து மழை பெய்தது.
இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்ற மாணவ,மாணவியர்கள் நனைந்தபடியும், குடைகளை பிடித்த சென்றனர். தினசரி வேலைக்கு செல்லும் மக்களின் இயல்பு வாழ்க்கையும், சாலையோர வியாபாரிகளும் தொடர் மழையால் வியாபாரம் இன்றி பாதிக்கப்பட்டனர்.
