சிவகங்கை, டிச.13: சிவகங்கை மன்னர் மேல்நிலைப் பள்ளியில் தேசிய மொழிகள் தினம் கொண்டாடப்பட்டது. முதுகலை பட்டதாரி ஆசிரியர் செல்வி வரவேற்புரை ஆற்றினார். தலைமை ஆசிரியர் சுந்தராஜன் தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் மாதவன் முன்னிலை வகித்தார். 2022ம் ஆண்டு பாரதியாரின் பிறந்த நாளை தேசிய மொழிகள் தினமாக மத்திய அரசு அறிவித்தது. அதன்படி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி, பாரதியார் பாடல் ஒப்பவித்தல் போட்டி உள்ளிட்டவைகள் நடத்தப்பட்டது. விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பள்ளி செயலாளர் குமரகுரு, பள்ளித் துணை ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி சிறப்புரை ஆற்றினர். இதில் தலைமை ஆசிரியர்கள் ராமலக்ஷ்மி, மேகலா, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
தேசிய மொழிகள் தினம் கொண்டாட்டம்
- தேசிய மொழிகள் தினம்
- சிவகங்கை
- கிங் சிவகங்கா செகண்டரி பள்ளி
- சுந்தரராஜன்
- உதவி தலைமை பதிப்பாளர்
- மாதவன்
- Bharatiyar
