போடி, டிச. 13: போடி அருகே முந்தல் குரங்கணி மெயின் ரோட்டில் குடியிருப்பவர் பெரியசாமி. கூலி வேலை செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் ஜெகதீசன் (20). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக முந்தலில் நடந்த கோயில் திருவிழாவின் போது இருவருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று பெரியசாமி போடி பெரியாண்டவர் ஹைரோட்டில் உள்ள ஒரு தனியார் மது கூடத்தில் இருந்தார்.
அப்போது அங்கு சென்ற ஜெகதீசன், பெரியசாமியை பார்த்து தகாத வார்த்தைகளால் ஆபாசமாக பேசி தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த பெரியசாமி போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து பெரியசாமி போடி நகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் எஸ்ஐ கிருஷ்ணவேணி ஜெகதீசன் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
