கூடலூர், டிச. 13: சபரிமலைக்கு வரும் பக்தர்கள் கேரள வனத்துறை வெளியிட்டுள்ள அய்யன் செயலியை இனி பயன்படுத்தலாம். பம்பை, சன்னிதானம், பம்பை-நீலிமலை-சன்னிதானம் எருமேலி-அழுதகடவ்- பம்பை, சத்திரம்-உப்புபாறை-சன்னிதானம் வழித்தடங்களில் கிடைக்கும் சேவைகள் குறித்து இந்த ஆப் மூலம் அறிந்துகொள்ளலாம். வழக்கமாக கானக (காட்டு) வழித்தடங்களில் உள்ள சேவை மையங்கள், மருத்துவ அவசர சிகிச்சை பிரிவு, தங்குமிடம், யானை பாதுகாப்பு குழு,(elephant squad )பொது கழிப்பறைகள், ஒவ்வொரு இடத்திலிருந்து சன்னிதானம் வரை உள்ள தூரம், தீயணைப்பு படை, போலீஸ் உதவி மையம், இ சேவா மையம் , இலவச குடிநீர் விநியோக மையங்கள் மற்றும் தூரம் பற்றிய தகவல்கள் இந்த செயலியில் அடங்கும். ஒரு இடத்துக்கும் அடுத்த இடத்துக்கும் உள்ள தூரம் இதில் அடங்கும்.
கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து இந்த ஆப்பை இன்ஸ்டால் செய்துகொள்ளும் ‘ஐயன்’ செயலி மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளது சபரிமலை செல்லும் வழிகளின் ஆரம்ப வாயில்களில் உள்ள க்யூ ஆர் ஸ்கேன் மூலமும் இப் பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்யலாம். பக்தர்கள் பின்பற்ற வேண்டிய பொதுவான தகவல்கள் பெரியார் வனவிலங்கு சரணாலயத்தின் தகவல்கள் மற்றும் சபரிமலை கோயில் பற்றிய தகவல்கள் செயலியில் இடம்பெற்றுள்ளன. அவசர காலங்களில் தொடர்பு கொள்ள அவசர உதவி எண்களும் இதில் உள்ளன.
இதன் பயன்பாடு ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அது மட்டும் அல்ல பக்தர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வழிகளில் பல்வேறு எச்சரிக்கைகளை ஆப் மூலம் பெறலாம். கேரளா புலிகள் காப்பக மேற்குப் டிவிசன் வனத்துறை இந்த செயலியை உருவாக்கியுள்ளது.
