ஆவடி மாநகராட்சியை கண்டித்து மதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

ஆவடி:  ஆவடி மாநகராட்சி நிர்வாகத்தின் சீர்கேடுகளை கண்டித்தும், ஆணையாளரை மாற்றக்கோரியும் ஆவடி மாநகர மதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகில் நேற்று  நடந்தது.  மாநகர செயலாளர் எஸ்.சூரியகுமார் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பச்சையப்பன், தினகரன், சுப்பிரமணி, பத்தன், ஜோதிலட்சுமி மௌலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.   முன்னதாக மாவட்ட பிரதிநிதி டி.எச்.ராஜ்மோகன் வரவேற்றார். இதில் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இறுதியில், கட்சியின் துணைபொதுச்செயலாளர் மல்லை சத்யா கண்டன உரையாற்றினார்.

மாவட்ட செயலாளர் டி.ஆர்.ஆர். செங்குட்டுவன், தேர்தல் பணிச்செயலாளர் வக்கீல் ஆவடி அந்திரிதாஸ், சட்டத்திருத்த குழு செயலாளர் வக்கீல் அருணாச்சலம், மாவட்ட அவைத் தலைவர் மு.பாபு, வடசென்னை மாவட்ட செயலாளர் டி.சி.ராஜேந்திரன், நிர்வாகிகள் அட்கோமணி, கௌரிகுமார், தனஞ்செழியன், வேலு, பங்காளி ரவி, மணி, தாமோதரன், கோவிந்தராஜ், கண்ணன், கதிரவன், தாமஸ், ரமேஷ், குமார் உள்பட வட்ட செயலாளர்கள், அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: