சென்னை: எல்லாருக்கும் எல்லாமும் என்ற சமத்துவ சமுதாயம் வர வேண்டும் என்பதுதான் எங்கள் லட்சியம் என மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் விரிவாக்கத்தை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். மேலும் ‘அரசின் திட்டங்கள் என்பது கொள்கை, சிந்தனையின் செயல்வடிவமாகும். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. வரலாற்றை மாற்றி எழுதும் திட்டம்தான் மகளிர் உரிமைத் தொகை திட்டம். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் வெற்றியின் உச்சமே, அண்டை மாநிலங்கள் கூட இந்தத் திட்டத்தை செயல்படுத்தி வருவதுதான். மக்கள் நலத் திட்டங்களை இலவசம் என கொச்சைப் படுத்துபவர்கள் கூட அவர்களின் மாநிலங்களில் இதை தொடங்கியுள்ளார்கள்’ எனவும் முதலமைச்சர் உரையாற்றினார்.
