மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.59 லட்சம் மதிப்பிலான பெட்ரோல் ஸ்கூட்டர் மற்றும் உதவி உபகரணங்களை வழங்கினார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.59 இலட்சம் மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் மற்றும் உதவி உபகரணங்களை வழங்கினார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் இன்று (10.12.2025) சென்னை, சைதாப்பேட்டை, ஜோன்ஸ் ரோடு, சென்னை பெண்கள் (மாந்தோப்பு) மேல்நிலைபள்ளியில் தென் சென்னை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் மற்றும் உதவி உபகரணங்கள் வழகும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், தென் சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 50 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.50,90,000/- மதிப்பிலான இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள், 5 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5,72,000/- மதிப்பிலான மின்கலனால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகள், 10 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,44,900/- மதிப்பிலான திறன் பேசிகள் (Smart Phone), 10 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 63,590/- மதிப்பிலான மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்கள் மற்றும் 5 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 28,600/- மதிப்பிலான காதுக்கு பின்னால் அணியும் காதொலி கருவிகள் என ஆக மொத்தம் 81 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 58,99,090/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில், சென்னை மாவட்ட வருவாய் அலுவலர் சு.கீதா, மண்டலக்குழுத் தலைவர் (கோடம்பாக்கம்) எம்.கிருஷ்ணமூர்த்தி, தென் சென்னை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீ.குமார் உட்பட மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: