வாக்குத் திருட்டு குறித்து நேரடி விவாதம் நடத்த தயாரா?.. அமித் ஷாவுக்கு ராகுல் காந்தி சவால்

டெல்லி: வாக்குத் திருட்டு குறித்து நேரடி விவாதம் நடத்த தயாரா என அமித் ஷாவுக்கு ராகுல் காந்தி சவால் விடுத்துள்ளார். மக்களவையில் தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான விவாதத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா; இரட்டை பதிவு, இறந்தோர் பெயர்களை நீக்குவதே எஸ்ஐஆரின் முதன்மைப் பணி. இரட்டை பதிவு, இறந்தோர் பெயர்களை நீக்குவதே எஸ்ஐஆரின் முதன்மைப் பணி; எஸ்ஐஆர் தொடர்பாக ஒன்றிய அரசு எந்தவொரு விவாதத்திற்கும் தயாராக உள்ளது. எஸ்ஐஆர் குறித்து பொய்களை பரப்பி மக்களை எதிர்க்கட்சிகள் தவறாக வழிநடத்துகின்றன. இந்திய குடிமக்களுக்கு மட்டுமே வாக்குரிமை.

தேர்தல் ஆணையம் என்பது அரசியல் சாசன அமைப்பாகும்; ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் அது கிடையாது. வாக்காளர் பட்டியலை மேம்படுத்த வேண்டும் என ராகுல் காந்தி கூறிக்கொண்டே வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து வருகிறார் என்று கூறினார். அப்போது குறுக்கிட்ட ராகுல் காந்தி கேள்வி; வாக்குத் திருட்டு குறித்து விவாதம் நடத்த அமித் ஷா அச்சப்படுகிறார். வாக்குத் திருட்டு குறித்து நேரடி விவாதம் நடத்த தயாரா? ஹரியானா வாக்காளர் பட்டியல் முறைகேடு தொடர்பான எனது கேள்விக்கு பதில் என்ன? தேர்தல் ஆணையர்கள் மீது நடவடிக்கை எடுக்காதபடி அதிகாரம் கொடுத்தது யார்?

உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் இருந்து அச்சத்துடன் கூடிய பதில்கள் வருகின்றன. வாக்குத் திருட்டு குறித்து விவாதம் நடத்த ராகுல் காந்தி சவால் விடுத்தபோது பாஜக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.

Related Stories: