மாவட்ட வாரியாக சுற்றுலா திட்டப் பணிகள் குறித்து அலுவலர்களுடன் அமைச்சர் இரா. இராஜேந்திரன் தலைமையில் ஆய்வுக்கூட்டம்

சென்னை: சுற்றுலாத்துறை அமைச்சர் இரா. இராஜேந்திரன் தலைமையில் சென்னை, வாலாஜா சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக கூட்டரங்கில்,மாவட்ட வாரியாக சுற்றுலா திட்டப் பணிகள் குறித்து சுற்றுலா அலுவலர்கள் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலம் நடத்தப்பட்டு வரும் தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள், படகு குழாம்கள் மற்றும் சுற்றுலா குறித்து மண்டல மேலாளர்கள், மேலாளர்கள் மற்றும் பொறியாளர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைப்பெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சர் நல்வழிகாட்டுதலின்படி, இன்று (09.12.2025) சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் தலைமையில், மாவட்ட வாரியாக சுற்றுலா வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து சுற்றுலா அலுவலர்கள் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலம் நடத்தப்பட்டு வரும் தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள், படகு குழாம்கள் மற்றும் சுற்றுலா குறித்து மண்டல மேலாளர்கள், மேலாளர்கள் மற்றும் பொறியாளர்களுடனான ஆய்வுக் கூட்டம் சென்னை, வாலாஜா சாலையில் அமைந்துள்ள சுற்றுலா வளாகத்தில் நடைபெற்றது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி, சுற்றுலாத்துறையில் மாவட்ட வாரியாக பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் ஈர்க்கும் வகையில் நம் பாரம்பரிய மிக்க தொன்மை வாய்ந்த பிரசித்திபெற்ற கோவில்கள், புராதான சின்னங்கள் மற்றும் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி வால்பாறை போன்ற இயற்கையாக அமையப்பெற்ற மலைவாச சுற்றுலாத் தலங்கள்.

தமிழ்நாட்டின் மாவட்ட வாரியாக சுற்றுலா தலங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள சுற்றுலா வளர்ச்சிப் பணிகள் குறித்தும் மாவட்டந்தோறும் வரக்கூடிய சுற்றுலாப் பயணிகளுக்கு சுற்றுலா தலங்களில் போக்குவரத்து முதற்கொண்டு, விருந்தோம்பல் போன்ற அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்படுத்திதரவேண்டுமென சுற்றுலா உயர் அதிகாரிகள் மற்றும் சுற்றுலா அலுவலர்களுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.

மேலும், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள், படகு குழாம்கள் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் பலதரப்பட்ட அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு ஏற்றார்போல் உணவு வழங்கி விருந்தோம்பலில் சிறப்புடன் திகழவேண்டுமெனவும் அடிப்படை வசதிகளில் குறைகள் இருப்பின் அதனை உடனடியாக சரிசெய்து விருந்தினர்களை நல்லமுறையில் நடத்த வேண்டுமென்றும், அனைத்து மண்டல அலகுகளிலும் வரவுசெலவு மற்றும் விருந்தினர்களிடம் விருந்தோம்பல் குறித்த தகவல்களை மண்டல மேலாளர் மற்றும் மேலாளர்களுடன் உரையாற்றி மேலும், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக, விருந்தோம்பல் சேவையை மேலும் சிறப்பாக நடத்த வேண்டுமென்று மண்டல மேலாளர்கள் மற்றும் மேலாளர்களுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் அறிவுறுத்தினார்,

இக்கூட்டத்தில், சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் க.மணிவாசன், சுற்றுலா இயக்குநர், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் தா.கிறிஸ்துராஜ், சுற்றுலாத்துறை இணை இயக்குனர் அ. சிவப்பிரியா, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக பொதுமேலாளர் சி. லட்சுமி பிரியா, மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: