இண்டிகோ விமான சேவைகளை 5% வரை குறைக்க சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவு

டெல்லி: இண்டிகோ விமான சேவைகளை 5% வரை குறைக்க சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவின் விமான போக்குவரத்தில் இண்டிகோ நிறுவனம் முக்கிய பங்காற்றுகிறது. அந்த நிறுவனத்திடம் 134 விமானங்கள் உள்ளன. இதன் மூலம் உள்நாட்டு சேவைகள் 1,840-ம், சர்வதேச சேவைகள் 460-ம் என அந்த நிறுவனம் இயக்கி வருகிறது. அதன்படி இந்தியாவின் மொத்த உள்நாட்டு விமான சேவையில் இண்டிகோ நிறுவனத்தின் பங்கு மட்டும் 55 சதவீதம் முதல் 68 சதவீதம் வரை உள்ளது.

இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக இண்டிகோ நிறுவனத்தின் விமானங்கள் பெருமளவில் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இதனால் இந்தியாவின் உள்நாட்டு விமான சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நாடே இதுவரை கண்டிராத அளவுக்கு விமான போக்குவரத்தில் மிகப்பெரிய பிரச்சனை எழுந்துள்ளது.

இதன் காரணமாக இண்டிகோ விமான சேவைகளை 5% வரை குறைக்க சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. தற்போதைய அட்டவணையின்படி, விமானங்களை திறமையாக இயக்கத் தவறியதால், 5% சேவைகளை குறைத்து நாளை (டிச.10) மாலை 5 மணிக்குள் திருத்தப்பட்ட அட்டவணையை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறைக்கப்படும் சேவைகள் பிற நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: