- சாய் சுதர்ஷன்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- அகமதாபாத்
- செளராஷ்டிராவின்
- சையது
- முஷ்டாக் அலி டி20 போட்டி
- சையத் முஷ்டாக் அலி டிராபி
அகமதாபாத்: சையத் முஷ்டாக் அலி டி20 போட்டியில் நேற்று, தமிழ்நாடு அணி, 3 விக்கெட் வித்தியாசத்தில் சவுராஷ்டிராவை வீழ்த்தியது. சையத் முஷ்டாக் அலி கோப்பைக்காக, அகமதாபாத்தில் நேற்று நடந்த போட்டியில் தமிழ்நாடு-சவுராஷ்டிரா அணிகள் மோதின. முதலில் ஆடிய சவுராஷ்டிரா அணியின் துவக்க வீரர் விஷ்வராஜ் ஜடேஜா 70 ரன் குவித்தார். பின்வந்தோரில் சம்மார் கஜ்ஜார் 66 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். 20 ஓவர் முடிவில் அந்த அணி 8 விக்கெட் இழந்து 183 ரன் குவித்தது. அதையடுத்து, 184 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தமிழ்நாடு களமிறங்கியது. துவக்க வீரர் சாய் சுதர்சன் அட்டகாசமாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். மற்றொரு துவக்க வீரர் துஷார் ரஹேஜா 1 ரன்னில் வீழ்ந்தார். இருப்பினும், சாய் சுதர்சன் கடைசி வரை ஆட்டமிழக்காமல், 55 பந்துகளில் 4 சிக்சர், 10 பவுண்டரிகளுடன் 101 ரன் விளாசினார். அதனால், தமிழ்நாடு, 18.4 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 185 ரன் குவித்து, 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
