- அபிஷேக் சர்மா
- மேற்கிந்திய தீவுகள்
- டூப்லெசியும்
- புது தில்லி
- டி20 உலகக்கோப்பை தொடர்
- அபிஷேக்
- ஜிம்பாப்வே...
புது டெல்லி: டி20 உலகக் கோப்பை தொடரில் தொடர்ந்து சொதப்பி வரும் இளம் வீரர் அபிஷேக் சர்மாவை ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக லீக் சுற்றில் தொடர்ந்து 3 போட்டிகளில் டக் அவுட் ஆன அபிஷேக், ஜிம்பாப்வே அணிக்கு எதிராக மட்டும் 55 ரன்கள் எடுத்தார். முக்கியமான வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெறும் 10 ரன்களில் மோசமான ஷாட் அடித்து அவுட்டானார். இந்த தொடரில் தற்போது வரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 131.14 ஸ்ட்ரைக் ரேட்டில் 13.33 என்ற சராசரியில் வெறும் 80 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதனால் அவரது பார்ம் குறித்து தொடர்ந்து கேள்விகள் எழுந்து வருகின்றன.
இந்த நிலையில், தென் ஆப்பிரிக்க முன்னாள் கேப்டன் பாப் டூ பிளெசிஸ் கூறுகையில், ‘‘வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்திய அணி வெற்றி பெற்றதால் அபிஷேக் சர்மா தப்பித்தார். அணி வெற்றி பெறும்போது, பார்மில் இல்லாத வீரரின் குறைகள் மறைக்கப்படலாம். ஆனால் அணி தோற்றால், முதல் பழி அவர்மீது தான் விழும். ஒருவேலை கொல்கத்தாவில் இந்தியா தோல்வியடைந்திருந்தால், விரல்கள் அனைத்தும் அபிஷேக் சர்மாவையே கை காட்டியிருக்கும்’’ என்றார். அபிஷேக் சர்மா மீதான அழுத்தம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அடுத்த போட்டிகளில் அவர் எப்படி மீள்வார் என்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
