சங்கராபுரம் அருகே சாலையில் சுற்றித்திரிந்த 10அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு

 

சங்கராபுரம், டிச. 8: சங்கராபுரம் அருகே சாலையோரம் இருந்த 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு பிடிபட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள அரசம்பட்டு கிராமத்தை சேர்ந்த திருமலை என்பவரின் வீட்டின் முன்பக்கத்தில் உள்ள ஆட்டுப்பட்டியின் அருகே சுமார் 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு சாலையின் ஓரங்களில் சுற்றி திரிந்துள்ளது. அப்போது அந்த மலைப்பாம்பு சாலை கடக்க முற்பட்டபோது, வீட்டின் உரிமையாளர் மற்றும் பொதுமக்கள் அதனை கண்டு அதிர்ச்சி அடைந்து அலறி அடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். பின்னர் பாம்பு பிடி வீரர் சங்கராபுரம் ரவி என்பவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் சம்பவ இடத்திற்கு வந்து சாலையின் அருகே உலாவி கொண்டிருந்த 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை கையால் பிடிக்க முற்பட்டபோது, அவரது கையில் பாம்பு சுற்றிக் கொண்டது. பின்பு மெல்ல மெல்ல மலைப்பாம்பை பிடித்து அவர் கையில் வைத்திருந்த சாக்குப்பையில் அடைத்து அருகே உள்ள வனப்பகுதியில் பத்திரமாக விடப்பட்டது.

 

Related Stories: