தூத்துக்குடி,டிச.8: தூத்துக்குடி மாநகராட்சி 15வது வார்டு பகுதியில் மழை நீர் வெளியேற்றும் பணிகளை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு செய்தார்.
வடகிழக்கு பருவமழை கனமழையால் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. அதனை வெளியேற்றும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாநகராட்சி 15வது வார்டுக்குட்பட்ட நியூ சுந்தரம் நகர் குடியிருப்பு பகுதியில் கனமழையால் தேங்கிய வெள்ள நீரை மின்மோட்டார் மூலம் வெளியேற்றும் பணியை அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
