விருத்தாசலம், டிச. 8: விருத்தாசலம் பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமியை கருவேப்பிலங்குறிச்சி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி அவரிடம் சிறுவன்அடிக்கடி உல்லாசத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இது குறித்து அறிந்த சிறுமியின் பாட்டி விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறுவனை கைது செய்து, கடலூர் சிறார் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர். சிறுமியை மீட்டு கடலூர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
