கஞ்சா விற்றவர் கைது

 

சாத்தூர், டிச. 7: சாத்தூர் நகர் எஸ்ஐ அண்ணாதுரை, போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மரியன் ஊரணி அருகே சின்னப்பர் குருசடிக்கு பின்னால் சந்தேகப்படும்படியாக நின்றிருந்த நபரை பிடித்து சோதனை நடத்திய போது அவரது சட்டப்பையில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரிந்தது.  விசாரணையில் அவர் ராஜபாளையம் சுந்தரராஜபுரம்மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த கணேஷ் ராஜ் (21) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கணேஷ் ராஜை கைது செய்து, அவரிடமிருந்த 90 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

 

Related Stories: