திமுக தேர்தல் பணி ஆலோசனை கூட்டம்

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில், திமுக தேர்தல் பணி ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய திமுக சார்பில் தேர்தல் பணி ஒருங்கிணைப்பாளர்கள், கிளை செயலாளர்கள், வாக்குச்சாவடி முகவர்கள், தேர்தல் பணிக்குழு உறுப்பினர்களுக்கான ஆலோசனை கூட்டம், தண்டலம் பகுதியில் நேற்று முன்தினம் நடந்தது. ஒன்றிய அவைத் தலைவர் மோகனன் தலைமை வகித்தார். இளைஞரணி அமைப்பாளர் குண்ணம் ராமமூர்த்தி வரவேற்றார். கேளம்பாக்கம் ஊராட்சி மக்கள் அச்சம்மாவட்ட துணை அமைப்பாளர்கள் குண்ணம் முருகன், வளர்புரம் ஜார்ஜ், செந்தில்தேவராஜன், ஒன்றிய துணை செயலாளர் ரவிசந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸ்ரீபெரும்புதூர் தெற்கு ஒன்றிய செயலாளர் மேவளூர்குப்பம் கோபால் கலந்து கொண்டு, தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள், வாக்குச்சாவடி நிலை முகவர்கள்ஆகியோருக்கு தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினார்.

Related Stories:

>