ஐபிஎல் போட்டிகளில் ஆந்த்ரே ரஸல் ஓய்வு

 

கொல்கத்தா: ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா அணிக்காக கடந்த 2014ம் ஆண்டு முதல் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஆந்த்ரே ரஸல் (37) ஆடி வந்தார். இம்மாதம் 16ம் தேதி ஐபிஎல் ஏலம் துவங்கவுள்ள நிலையில், ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெறுவதாக ரஸல் அறிவித்துள்ளார். மேலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பவர் கோச் ஆக அவர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக எக்ஸ் சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ‘ஐபிஎல் போட்டிகளில் ஓய்வு பெறுகிறேன். 12 சீசன்களுக்காக ஆடிய நினைவுகள் என்றென்றும் நீடித்திருக்கும். கேகேஆர் குடும்பம் என் மீது அளவு கடந்த அன்பு வைத்துள்ளது’ எனக் கூறியுள்ளார்.

Related Stories: