கொல்கத்தா: ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெறுவதாக கேகேஆர் அணி வீரர் ஆண்ட்ரே ரஸல் அறிவித்துள்ளார். 2026 ஐபிஎல் தொடருக்கான ஏலம் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில் கேகேஆர் அணியிலிருந்து ஆண்ட்ரே ரஸல் விடுவிக்கப்பட்டதை அடுத்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஆண்ட்ரே ரஸல் வேறு எந்த அணிக்காகவும் விளையாட விரும்பவில்லை, அதனால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார் எனவும் கூறப்படுகிறது.
