திருக்கடையூரில் திமுக சார்பில் துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள் கொண்டாட்டம்

தரங்கம்பாடி, நவ.29: மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் தமிழ்நாடு துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணி மாநில செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா செம்பனார்கோவில் மத்திய ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் அமுர்தவிஜயகுமார் தலைமையில் கொண்டாடப்பட்டது. திருக்கடையூர் பஸ் நிலையத்தில் வெடி வெடித்து கேக்வெட்டி, இனிப்பு, உணவுகள் பொதுமக்களுக்கு வழங்கினர்.

இளைஞரணி ஒன்றிய அமைப்பாளர் மாரியப்பன், அரசு வழக்கறிஞர் கார்த்திகேயன், ஒன்றிய நிர்வாகிகள் மணிமாறன், கருணாநிதி, சிவக்குமார், சங்கர்கணேஷ், சிவராஜ் மதியழகன், பெருமாள்கோவில் அறங்காவலர் குழு தலைவர் ரத்தினகுமார், திமுக விவசாய தொழிலாளர் அணி செந்தில், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் எழில்நம்பி உட்பட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்.

 

Related Stories: