பா.ஜ மாநில தலைவர் முருகன் இன்று குமரி வருகை அருமனை பொங்கல் விழாவில் பங்கேற்கிறார்

நாகர்கோவில், ஜன.11: குமரி மாவட்ட பா.ஜ. சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருநெல்வேலியில் இருந்து கார் மூலம் இன்று (11ம் தேதி) குமரி மாவட்டம் வரும் தமிழக பா.ஜ தலைவர் முருகனுக்கு தோவாளையில் மாவட்ட பாஜ சார்பில் காலை 9.30 மணிக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரை நாகர்கோவில், வடசேரி ஓட்டலில் நடைபெறுகின்ற கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் பேசுகிறார். பகல் 12.10 முதல் 12.20 வரை டாக்டர் அம்பேத்கர் மக்கள் இயக்க மாவட்ட தலைவர் மற்றும் நிர்வாகிகளை அங்கு சந்தித்து பேசுகிறார்.

பின்னர் பிற்பகல் 2.10 மணிக்கு ஆசாரிபள்ளம் சாலையில் உள்ள அரங்கில் நடைபெறுகின்ற நிகழ்வில் மாற்றுகட்சியினர் முருகன் முன்னிலையில் பா.ஜ.வில் இணைகின்றனர். தொடர்ந்து மாலை 3.10 மணிக்கு அருமனை புறப்பட்டு செல்லும் அவருக்கு குழித்துறையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. மாலை 6 மணிக்கு அருமனையில் நடைபெறுகின்ற பொங்கல் விழாவில் கலந்துகொண்டு பேசுகிறார். பின்னர் இரவு நாகர்கோவிலில் தங்குகிறார். நாளை காலை சென்னை புறப்பட்டு செல்கிறார். இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>