அமெரிக்கா, இந்தியா வர்த்தக ஒப்பந்தம் குறித்து ஆலோசனை

வாஷிங்டன்: அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக இந்திய தூதர் வினய் மோகன் அமெரிக்க வெளியுறவு துறை அதிகாரியுடன் ஆலோசனை நடத்தினார். அமெரிக்காவிற்கான இந்திய தூதர் வினய் மோகன் குவாட்ரா, கடந்த சில மாதமாக அமெரிக்க எம்பிக்களை சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் வினய் மோகன், அமெரிக்க வெளியுறவு துறை துணை செயலாளர் ஜாக்கப் எஸ் ஹெல்பெர்க்கை சந்தித்துப் பேசினார். பொருளாதார வளர்ச்சி,எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழலுக்கான துணைச் செயலாளராக பொறுப்பேற்றதற்காக ஹெல்பெர்க்கிற்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.

இந்த சந்திப்பு குறித்து இந்திய தூதர் வினய் மோகன் தனது சமூக ஊடக பதிவில், \”பரஸ்பர நன்மை பயக்கும் வர்த்தக ஒப்பந்தம் குறித்தும், ஏஐ உள்ளிட்ட தொழில்நுட்ப ஒத்துழைப்பு உள்ளிட்ட இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தினோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: