ஜனநாயகம் மற்றும் தேர்தல் உதவிக்கான சர்வதேச நிறுவன தலைவராக ஞானேஷ்குமார் தேர்வு

புதுடெல்லி: சுவீடனில் செயல்பட்டு வரும் ஜனநாயகம் மற்றும் தேர்தல் உதவிக்கான சர்வதேச நிறுவனம் (ஐஐடிஇஏ) என்ற அமைப்பில் இந்தியா உள்பட 35 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. அமெரிக்கா,ஜப்பான் ஆகியவை பார்வையாளர்களாக உள்ள இந்த அமைப்பு கடந்த 1995ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிறுவனத்தின் தலைவராக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஸ்டாக்ஹோமில் டிச.3ம் தேதி நடக்கும் கவுன்சில் கூட்டத்தில் ஞானேஷ்குமார் தலைவராக பதவியேற்பார். அடுத்த ஆண்டு நடைபெறும் கவுன்சில் கூட்டத்திற்கு ஞானேஷ்குமார் தலைமை தாங்குவார்.

Related Stories: