ரூ.5,000 லஞ்சம் வாங்கிய துணை தாசில்தாருக்கு 3 ஆண்டு சிறை

நெல்லை: நெல்லை அருகே சீவலப்பேரி கிராமத்தில் அரசு அனுமதி பெற்று மணல் அள்ளும் தொழில் செய்து வருபவர் ரவி. இவரிடம், ‘தொடர்ந்து மணல் அள்ள வேண்டும் என்றால் மாதம் தோறும் ரூ.5 ஆயிரம் லஞ்சமாகத் தர வேண்டும். இல்லையென்றால், ஏதாவது ஒரு காரணம் சொல்லி வழக்குப் போட்டு விடுவேன்’’ என்று கடந்த 2019ம் துணை தாசில்தார் விஜி மிரட்டியதாக கூறப்படுகிறது. லஞ்சம் கொடுக்க விரும்பாத ரவி, நெல்லை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அவர்கள் அறிவுறுத்தலின்படி பணத்தை ரவிவழங்கிய போது துணை தாசில்தார் விஜியை லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசார் கையும், களவுமாகப் பிடித்தனர். இந்த வழக்கை விசாரித்த நெல்லை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுப்பையா, துணை தாசில்தார் விஜிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். சிறைத் தண்டனை பெற்ற விஜி தற்போது நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் துணை தாசில்தாராக பணியாற்றி வருகிறார்.

Related Stories: