30ல் மஜக செயற்குழு

சென்னை: சென்னையில் வரும் 30ம் தேதி மனிதநேய ஜனநாயக கட்சியின் செயற்குழு கூட்டம் நடக்கிறது என மஜக பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது தெரிவித்துள்ளார். வரும் 30ம் தேதி காலை 10.30 மணிக்கு திருவல்லிக்கேணி அல் மாலிக் மகாலில் செயற்குழு நடைபெறும். மாவட்டச் செயலாளர்கள், மாவட்டப் பொருளாளர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள். வரும் சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி குறித்து இதில் ஆராய்ந்து முடிவெடுக்கப்பட உள்ளது. எனவே அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Related Stories: