ஆண்டுக்கு ரூ.1 கோடி கட்டணம் செலுத்தும் EWS பிரிவு மாணவர்கள்

 

சென்னை: தனியார் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவ படிப்பில் சேர்ந்த EWS பிரிவைச் சேர்ந்த 140 மாணவர்கள் ரூ.1 கோடி வரை கட்டணம் செலுத்தி படிக்கின்றனர். உயர்ஜாதி ஏழைகளுக்கான இடஒதுக்கீட்டின் கீழ் முதுநிலை நீட் தேர்வு எழுதியுள்ளனர். பிஜி நீட் தேர்வில் மதிப்பெண் மிக குறைந்தபோது என்ஆர்ஐ ஒதுக்கீட்டின் கீழ் படிப்பில் சேர்ந்து ஆண்டுக்கு ஒரு கோடி கட்டணம் செலுத்துகின்றனர். EWS பிரிவில் முதுநிலை மருத்துவ படிப்பில் சேர்ந்து ஆண்டுக்கு ரூ.25 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை கட்டணம் செலுத்தும் மாணவர்கள். உயர்ஜாதி ஏழைகளுக்கான இடஒதுக்கீட்டின் நம்பகத்தன்மையே கேள்வி எழுப்பும்படி உள்ளதாக கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆண்டு குடும்ப வருமானம் ரூ.8 லட்சம் மட்டுமே உள்ள மாணவர்கள் மட்டுமே உயர்ஜாதி ஏழைகள் பிரிவில் மருத்துவ படிப்பில் சேர முடியும்.

Related Stories: