ரூ.11.81 கோடியில் நவீன வசதிகளுடன் அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையத்தைத் திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!!

சென்னை: ரூ.11.81 கோடியில் நவீன வசதிகளுடன் அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையத்தைத் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் நவீனமயமாக்க அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் தீபக் பாண்டியன் சட்டமன்றத்தில் இந்த கோரிக்கையை முன்வைத்தார். இதனையடுத்து முதலமைச்சர் 14.3.2025ம் ஆண்டு இந்த பேருந்து நிலையத்திற்கான அடிக்கல்லை நாட்டினார். இந்த பேருந்து நிலையம் 11.81 கோடி மதிப்பீட்டில் 26,346 சதுர அடியில் நவீனமயமாக்கப்பட்டுள்ளது. இத்தகைய பேருந்து நிலையத்தில் 20 பேருந்துகள் நிற்கும் அளவிற்கான வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. 53 ஆண்டுகளுக்கு முன்னர் முன்னாள் முதலமைச்சராக இருந்த கலைஞர் போக்குவரத்து அமைச்சராக இருந்த போது அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையத்தை தொடங்கி வைத்தார்.

பின்னர், இந்த பேருந்து நிலையத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கிவைத்தார். இந்த பேருந்து நிலையத்தில் ATM வசதிகள், 11 கடைகள், பயணசீட்டு வழங்கும் அறை, உணவகங்கள், தாய்மார்கள் பாலூட்டும் அறை, நவீன கழிப்பறை வசதிகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், போக்குவரத்து தொழிலாளர்களின் ஓய்வறைகள், சிசிடிவி கேமராக்கள், நவீன கழிப்பிட வசதியுடன் கூடிய மூத்த குடிமக்கள் தங்கும் அறைகள் என பல்வேறு வசதிகளுடன் நவீனமயமாக்கப்பட்டுள்ளது. இத்தகைய பேருந்து நிலையத்தில் நாள் ஒன்றுக்கு 140 பேருந்துகள் 10 முறை வந்து செல்லும் அளவிற்கு 1400 முறை பயன்படுத்தும் அளவிற்கு இந்த பேருந்து நிலையம் மேம்படுத்தப்பட்டுள்ளது. பெருநகர வளர்ச்சிக்குழுமம் சார்பில் இந்த பேருந்து நிலையம் கட்டிமுடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: