ஈரோடு தமிழன்பனுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: கவிஞர் ஈரோடு தமிழன்பனுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கவிஞர் ஈரோடு தமிழன்பன் என்கிற செகதீசன் உடல்நலக்குறைவின் காரணமாக இயற்கை எய்தியதையடுத்து அன்னாரின் உடலுக்கு முதல்வர் நேற்று முன்தினம் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

மேலும், இறுதிகாலம் வரையிலும் பல வகைமைகளிலும் தமிழுக்கு தொண்டாற்றிய, நீண்ட நெடிய பெருவாழ்வுக்கு சொந்தக்காரரான கவிஞர் ஈரோடு தமிழன்பனை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கும், தமிழன்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் முதல்வர் இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அதைதொடர்ந்து கவிஞர் ஈரோடு தமிழன்பன் தமிழ் தொண்டினை கவுரவிக்கும் விதமாக காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: