வீடுகளுக்குள் கழிவுநீர் செல்லாமல் தடுக்க தடுப்புச்சுவர் அமைப்பு

காங்கயம், ஜன.7: காங்கயத்தில் சாக்கடைக் கழிவுநீர் வீடுகளுக்குள் புகுந்து விடாமல் இருக்க தடுப்புச் சுவர் அமைத்துள்ளனர். காங்கயம் நகராட்சி அலுவலகம் அருகே அமைந்துள்ளது ராஜாஜி வீதி. இப்பகுதியில் சாக்கடைக் கழிவு நீர் முறையாக வெளியேறாமல் ஆங்காங்கே சாக்கடையில் தேங்கி நின்று, பல வருடங்களாக சுகாதார சீர்கேட்டினை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து பலமுறை நகராட்சி அலுவலகத்தில் முறையிட்டும் இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படவில்லை.இதனால், வீட்டு வாசலில் தேங்கி நிற்கும் சாக்கடைக் கழிவுநீர் வீட்டுக்குள் புகுந்து விடாமல் தடுக்க இப்பகுதி மக்கள் வீட்டு வாசலில் சிறிதாக தடுப்புச்சுவர் எழுப்பி உள்ளனர். இருப்பினும், கழிவுநீரின் துர்நாற்றமும், சுகாதாரச் சீர்கேடும் ஏற்பட்டு வருவதால், தொடர்ந்து சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, காங்கயம் நகராட்சி நிர்வாகம் ராஜாஜி வீதியில் உள்ள சாக்கடைக் கழிவுநீரை முறையாக வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: