புதுச்சேரி மதுபாட்டில் கடத்திய வாலிபர் கைது

விழுப்புரம், நவ. 18: விழுப்புரம் மாவட்ட மது விலக்கு அமல் பிரிவு ஆய்வாளர் சுஜாதா மற்றும் போலீசார் தலைமையில் பனையபுரம் சோதனை சாவடி அருகே நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில், அதில் புதுச்சேரி மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. விசாரணையில் அந்த நபர் விழுப்புரம் ஜிஆர்பி தெருவை சேர்ந்த குப்புசாமி மகன் பிரதாப் (44) என தெரியவந்தது. மேலும் அவர் மீது வழக்குபதிந்து கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 200 மது பாட்டில்கள் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர்.

Related Stories: