பாளை. சாந்திநகர் குழந்ைத இயேசு ஆலய திருவிழா கொடியேற்றம் கிறிஸ்தவர்கள் திரளாக பங்கேற்பு

நெல்லை, ஜன. 6: பாளை சாந்திநகர் குழந்தை இயேசு ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. இதில் கிறிஸ்தவ மக்கள் திரளாகப் பங்கேற்றனர். வருகிற 14ம் தேதி திருவிழா திருப்பலி நடக்கிறது. பாளை மறைமாவட்டம், சாந்திநகர் குழந்தை இயேசு திருத்தல திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்தாண்டுக்கான திருவிழா நேற்று (5ம் தேதி) மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. பாளை மறைமாவட்ட முதன்மைகுரு குழந்தைராஜ் கொடியேற்றி வைத்தார். தொடர்ந்து அவரது தலைமையில் திருப்பலி நடந்தது. அருட்பணி முனைவர் சகாயஜான் மறையுரை ஆற்றினார்.

விழாவில் பாளை மறைமாவட்ட சாந்திநகர் பங்குதந்தை, செயலக முதல்வர் ஞானப்பிரகாசம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த கிறிஸ்தவ மக்கள் திரளாக பங்கேற்றனர். வரும் 14ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் மாலை 5.45 மணிக்கு ஜெபமாலையும், தொடர்ந்து திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீரும் நடக்கிறது. 10ம் நாளன்று காலை 7 மணிக்கு பாளை மறை மாவட்ட ஆயர் அந்தோணி சாமி தலைமையில் திருவிழா திருப்பலி நடக்கிறது. தொடர்ந்து சிறுவர், சிறுமியர்களுக்கு புதுநன்மை வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை சாந்திநகர் பங்குதந்தை, செயலக முதல்வர் ஞானப்பிரகாசம் மற்றும் திருவழிபாட்டு பணிக்குழு, பங்கு நிதிக்குழு, பங்கு இறைமக்கள் செய்து வருகின்றனர்.

Related Stories: