கேடிசி நகர், நவ.13: சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ் (86). இவர் கடந்த சில வருடங்களுக்கு முன் தனது குடும்பத்தை பிரிந்து தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்த அச்சன்புதூர் அருகே உள்ள பண்பொழி பகுதிக்கு வந்துள்ளார். பின்னர் அங்குள்ள கடைகளில் வேலை பார்த்து விட்டு அங்கேயே தங்கியிருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் வெங்கடேஷ் மீது அந்த வழியாக சென்ற லாரி ஒன்று மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு காயமடைந்தார். உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி வெங்கடேஷ், பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அச்சன்புதூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கோட்டை அருகே பரிதாபம் லாரி மோதி தொழிலாளி பலி
- செங்க்கோட்
- கேடிசி நகர்
- வெங்கடேஷ்
- திருவள்ளூர் மாவட்டம்
- சென்னை
- அகன்புத்தூர்
- சென்கோட், தென்காசி மாவட்டம்
