மரடோனா நினைவு கால்பந்து போட்டி தோடர் பழங்குடியின அணி சாம்பியன்

ஊட்டி, ஜன. 5:  ஊட்டியில் நடந்த மரடோனா நினைவு கால்பந்து போட்டியில் தோடர் பழங்குடியின அணி வெற்றி பெற்றது. மறைந்த கால்பந்து ஜாம்பவான் மரடோனா நினைவு கால்பந்து போட்டி  ஊட்டியில் நடந்தது. இந்த போட்டியில் மாவட்டம் முழுவதிலிருந்தும் 32 அணிகள் கலந்துக்கொண்டன. இறுதி போட்டியில் ஆர்எம்எப்சி தோடா மற்றும் ஷூலெஸ் ஒன்ஸ் அணிகள் மோதின. நேற்று இறுதி போட்டி நடந்தது. சாரல் மழைக்கு இடையே போட்டி விறுவிறுப்பாக நடந்தது.

ஆட்ட தொடக்கத்தில் ஷூலெஸ் ஒன்ஸ் அணியின் வீரர் கவுரி இரு கோல்களை அடித்து, தனது அணியை முன்னிலை பெற செய்தார். முதல் பாதியில் ஷூலெஸ் ஒன்ஸ் அணி 2-1 என்ற கோல்கணக்கில் முன்னிலை பெற்றது. ஆனால், இரண்டாம் பாதியில் ஆர்எம்எப்சி., தோடா அணி வீரர்கள் சுதாரித்து தொடர்ந்து 3 கோல்களை அடித்தனர்.

இதனால், ஆட்ட நேர இறுதியில் 4-2 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது. போட்டியின் சிறந்த கோல்கீப்பராக ஆர்எம்எப்சி தோடா அணியில் கோல்கீப்பர் நர்தேஸ் தேர்வு செய்யப்பட்டார். சிறந்த வீரராக ஷூலெஸ் ஒன்ஸ் அணியின் வீரர் கவுரி தேர்வு செய்யப்பட்டார். வெற்றி பெற்ற அணிக்கு 2017ம் ஆண்டு ஆசியன் சாம்பியன்ஷிப் போட்டியில் 5000மீ, 10000மீ ஓட்ட போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய நீண்டதூர ஓட்டப்பந்தய வீரர் லட்சுமணன் கோப்பை மற்றும் பரிசு தொகையான ரூ.10 ஆயிரம் வழங்கினார். இரண்டாம் இடம் பிடித்த அணிக்கு ரூ.7 ஆயிரம் ரொக்கம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.  கிரசென்ட் பள்ளி தாளாளர் பாரூக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: