×

பெயிண்டரிடம் செல்போன் பறித்தவருக்கு 2 ஆண்டு சிறை

திருப்பூர், நவ. 12: திருப்பூர் போயம்பாளையத்தை சேர்ந்தவர் ஆபிரகாம்செல்வம் (55), பெயிண்டர். கடந்த 31-12-2023 அன்று இரவு இவர், புதிய பஸ்நிலையம் பகுதியில் நடந்து சென்றார். அப்போது, அவரை திருப்பூர் கல்லாங்காடு ரோடு, எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த கணேஷ் (30) என்பவர் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்துக்கொண்டு தப்பினார்.

இதுகுறித்து வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான வழக்கு, திருப்பூர் முதலாவது ஜூடீசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தி நடைபெற்று வந்தது. நேற்று, இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி வழிப்பறி குற்றத்திற்கு கணேசுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.100 அபராதம் விதித்து மாஜிஸ்திரேட் செந்தில்ராஜா தீர்ப்பளித்தார்.

 

Tags : Tiruppur ,Abraham Selvam ,Boyampalayam, Tiruppur ,Ganesh ,MGR Nagar, Kallangadu Road, ,Tiruppur… ,
× RELATED உடுமலை பகுதியில் கொண்டைக்கடலை சாகுபடி தீவிரம்