டெல்லி: டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடித்தது தற்கொலை தாக்குதல் என போலீஸ் விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரிதாபாத்தில் வெடிமருந்துகளுடன் முஸாமில் என்பவர் கைதானதை அறிந்ததும் அவரது கூட்டாளியான முகமது உமர் தற்கொலை தாக்குதல் நடத்தினார். தற்கொலை தாக்குதலின் நோக்கம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
