பாதுகாப்பு படைகள் – ஒன்றிய அரசுத்துறை ஓய்வூதியதாரர்களுக்கு நாளை டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் முகாம்

சென்னை: பாதுகாப்புப் படைகள், பாதுகாப்பு சிவில் நிறுவனங்கள் மற்றும் ஒன்றிய அரசு துறைகளின் ஓய்வூதியதாரர்களுக்கு டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ்களைப் புதுப்பிப்பதற்கான முகாம் நாளை தாம்பரத்தில் உள்ள விமானப்படை நிலையத்தில் நடைபெறவுள்ளது.

இந்திய விமானப்படை, சென்னை பாதுகாப்பு கணக்குக் கட்டுப்பாட்டாளர் அலுவலகம் ஆகியவை இணைந்து இந்த முகாமை நடத்துகின்றன. ஓய்வூதியதாரர்கள் ஒரே இடத்தில் தங்களது ஆயுள் சான்றிதழ்களைப் புதுப்பிப்பதற்கும், அவர்களுக்கு குறைகள் இருப்பின் அவற்றை அங்கேயே நிவர்த்தி செய்வதற்கும் ஏற்ற தீர்வாக இந்த முகாம் செயல்படும். ஆயுள் சான்றிதழ்களை டிஜிட்டல் முறையில் புதுப்பிப்பது குறித்த செயல்விளக்கங்களும் வழங்கப்படும்.

Related Stories: