×

சட்டவிரோத இரும்புத்தாது ஏற்றுமதி கர்நாடக காங். எம்எல்ஏவின் ரூ.21 கோடி சொத்து முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி

பெங்களூரு: உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள பெலகேரி துறைமுகத்திலிருந்து சுமார் 7.23 லட்சம் டன் இரும்புத்தாதுவை சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்ததன் மூலம் அரசுக்கு ரூ.28 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக கார்வார் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ சதீஷ் கிருஷ்ணா சைல் உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இதுதொடர்பாக அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கும் நிலையில், கடந்த ஆகஸ்ட் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் கர்நாடகா, கோவா, மும்பை, டெல்லி ஆகிய மாநிலங்களில் சதீஷ் சைலுக்கு சொந்தமான 15 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.1.41 கோடி ரொக்கம், 6.75 கிலோ தங்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த செப்டம்பர் மாதம் சதீஷ் சைல் கைது செய்யப்பட்டார். தற்போது அமலாக்கத்துறை, ரூ.21 கோடி மதிப்புடைய அவரது சொத்துகளை முடக்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

Tags : Karnataka ,Kong ,MLA ,Bangalore ,Karwar ,Congress ,Belagari ,Uttar Kanada district ,L. A Satish Krishna Sail ,
× RELATED ஆசிட் வீச்சு பாதிப்பிலிருந்து மீண்டு...