×

வெல்டிங் மெஷின் திருடியவர் கைது

காங்கயம், நவ. 6: காங்கயம், திருப்பூர் ரோடு சுபாஷ் வீதியில் வசித்து வருபவர் சிவக்குமார் (42). இவர், காங்கயத்தில் மெடிக்கல் ஷாப் நடத்தி வருகிறார். படியூரிலுள்ள இவரது மற்றொரு வீட்டில் கட்டிடப் பணிகள் நடைபெற்று வருகிறது. சிவன்மலையைச் சேர்ந்த பூபதி(25) என்பவர் பணிகளை செய்து வந்தார். நேற்று முன்தினம் மதியம் பூபதி வெளியே சென்றபோது கட்டிட பணிக்காக பயன்படுத்த வைத்திருந்த வெல்டிங் மற்றும் ட்ரில்லிங் மெஷின் ஆகியவை திருடு போனது.

இதையடுத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பார்த்து காங்கயம் போலீசில் புகார் அளித்துள்ளார்.  போரீசார் விசாரணை நடத்தினர். திருட்டியில் ஈடுபட்ட வெள்ளகோவில், செம்மாண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த சிவகுமார்(33) என்பவரை வெள்ளகோயில் உள்ள டாஸ்மாக் கடையில் வைத்து போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து வெல்டிங் மெஷினை மீட்டனர். காங்கயம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

Tags : Kangayam ,Sivakumar ,Subhash Road, Tirupur Road, Kangayam ,Padiyur ,Bhupathi ,Sivanmalai ,
× RELATED அதிகரட்டியில் நாளை மின்தடை