×

பாலக்காட்டில் 4ம் தேதி பிரியங்கா காந்தி பிரசாரம் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்

பாலக்காடு,ஏப்.1: பாலக்காடு கோட்டை மைதானத்தில் பிரியங்கா காந்தி வருகிற 4ம் தேதி தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். கேரளாவில் வருகிற 9ம் தேதி சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடக்கிறது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, மா.கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி முன்னணி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களிடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

வேட்பாளர்களுக்கு கட்சி தலைவர்கள் ஆதரவு திரட்டி வருகிறார்கள்.தேர்தலுக்கு மிகவும் குறைந்த நாட்களே உள்ளதால் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. பாலக்காடு மாவட்டத்தில் பிரதமர் மோடி, ராகுல்காந்தி, சசிதரூர், கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் வருகிற 4ம் தேதி பாலக்காடு கோட்டை மைதானத்தில் நடைபெறும் காங்கிரஸ் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளரும், வயநாடு எம்.பி.யுமான பிரியங்கா காந்தி பேசுகிறார். பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகளை பாலக்காடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியினர் செய்த வருகின்றனர்.

 

 

Tags : Priyanka Gandhi ,Palakkad ,Palakkad Fort Ground ,Kerala ,Congress ,United Democratic Front ,Communist Party of India ,
× RELATED 30 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற தோடர் பழங்குடியினர் கோயில் கும்பாபிஷேகம்