ஆலையில் தீ விபத்து

சிவகாசி, நவ.5: சிவகாசி அருகே பட்டாசுகளுக்கு பயன்படுத்தும் அட்டை குழாய் தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது. சிவகாசி அருகே விஸ்வநத்தத்தில் சிவபெருமாள் என்பவருக்கு சொந்தமான பட்டாசுகளுக்கு பயன்படுத்தும் அட்டை குழாய் தயாரிக்கும் ஆலை உள்ளது.

நேற்றுமுன்தினம் இரவு இங்கு தீ விபத்து ஏற்பட்டு ஆலையில் வைக்கப்பட்டிருந்த குழாய்கள் மற்றும் மூலப்பொருட்கள் எரிந்து நாசமானது. இது குறித்து தகவலறிந்து வந்த சிவகாசி தீயணைப்பு நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமையில் சென்ற தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்தனர். இச்சம்பவம் குறித்து சிவகாசி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related Stories: