அரசு ஊழியர்கள் மீதான கைது நடவடிக்கை களைய வேண்டும் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்

திருவாரூர், ஜன.1: ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் திருவாரூரில் மாவட்ட தலைவர் முருகேசன் தலைமையிலும், செயலாளர் ஈவேரா, பொருளாளர் சுபா ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. இதில் பொதுச்செயலாளர் ரங்கராஜன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி, ஜூலியஸ், பொதுக்குழு உறுப்பினர்கள் ஜெயசீலன், அமிர்தராஜ், ஜெயந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதில் ஜாக்டோ ஜியோ போராட்டத்தின்போது ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட கைது நடவடிக்கைகள் காரணமாக பதவி உயர்வு, ஓய்வு பெறுவது மற்றும் பணப்பலன்கள் போன்றவை பாதிக்கப்பட்டு வருவதால் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு கைவிட வேண்டும், 6 வது ஊதியக் குழுவின் அடிப்படையில் ஊதிய முரண்பாடுகள் தொடர்பாக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இடைநிலை ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்காக ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் இணைந்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் இருந்து வருகிறது எனவே இந்த ஊதிய முரண்பாடுகளை அரசு கலைய வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: