பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் பெங்களூரு பல்கலை பேராசிரியர் கைது

பெங்களூரு: பெங்களூரு பல்கலைக்கழக பேராசிரியர் பி.சி.மைலரப்பா நடத்தும் கர்நாடக ராஜ்ய ஹரிஜன் சேவக் சங்கத்தில் கடந்த 2022ம் ஆண்டு நவம்பரில் உறுப்பினராக சேர்ந்த ஒரு பெண், 2 ஆண்டுகள் அங்கு பணியாற்றினார். அந்தப் பெண்ணை மைலரப்பா பாலியல் ரீதியாக துன்புறுத்தத் தொடங்கினார்.

ஒருமுறை சாலையில் வைத்து அந்தப் பெண்ணின் இடுப்பைப் பிடித்து தாக்கியிருக்கிறார். இதுதொடர்பாக அந்தப் பெண் கொடுத்த புகாரின் பேரில் பசவேஸ்வராநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பேராசிரியர் மைலரப்பாவைக் கைது செய்தனர்.

Related Stories: