சேலம், டிச.30: சேலத்தில் இயங்கி வரும் 50க்கும் மேற்பட்ட துறைகளை சேர்ந்த, 500 நிறுவனங்களை தேர்ந்தெடுத்து, சேலம் ரோட்டரி க்ரீன், ஸ்மார்ட் சேலம் இணைந்து, சேலம் வணிக விருதுகள் வழங்கும் விழாவை நடத்தியது. நிகழ்ச்சியில் மருத்துவமனைக்கான துறையில், பொதுமக்களுக்கு சிறந்த சேவை அளித்ததாக காவேரி மருத்துவமனை தேர்ந்தெடுக்கப்பட்டது. அதற்கான விருதினை ரோட்டரி மாவட்ட கவர்னர் வெங்கடேசன் வழங்கினார்.