கும்பகோணம் பெரிய தெருவில் தமிழ்நாடு கிராம வங்கி 679 வது கிளை திறப்பு

 

தஞ்சாவூர்,அக்.28: தமிழ்நாடு கிராம வங்கி தனது 679 வது கிளையை தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பெரிய தெருவில் நேற்று(27.10.25) துவங்கியது. துணை மேயர் தமிழழகன் மற்றும் வங்கியின் தலைவர் மணி சுப்ரமணியன் ஆகியோர் ரிப்பன் வெட்டி கிளையை திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சிக்கு வங்கியின் தலைவர் மணி சுப்ரமணியன், வங்கியின் மண்டல மேலாளர் பிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வங்கியின் சாதனைகள் பற்றி தலைவர் மற்றும் மண்டல மேலாளர் பேசினார்கள். மேலும் வைப்பு நிதி திட்டத்தில் கணக்கு தொடங்கியவர்களுக்கு வைப்புத்தொகை ரசீதுகள் வழங்கப்பட்டன. இத்திட்டத்தில் அதிகபட்ச வட்டியாக 7.50% வரை வழங்கப்படுகிறது. முடிவில் கிளையின் மேலாளர் தீபாராணி நன்றி கூறினார்.

Related Stories: