‘ஸ்ரீநிவாஸ்’ என பெயர் கொண்ட 2 ஆயிரம் பேர் ஒரே இடத்தில் சங்கமம்: 250 பேர் ரத்த தானம்

திருப்பதி: தெலங்கானா மாநிலம், கரீம்நகர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்ரீநிவாச ரெட்டி. இவர் ஸ்ரீனிவாஸ் என பெயர் கொண்ட அனைவரையும் ஒருங்கிணைக்கும் நோக்கத்துடன் கடந்த 2023ம் ஆண்டு பல வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்கினார். அதன் மூலம் தெலங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 36 ஆயிரம் பேரை இணைக்க நேற்று முன்தினம் கோத்தப்பள்ளி மண்டலம், மல்காபூர் பகுதியில் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தினார். இதில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஸ்ரீநிவாஸ் என பெயர் கொண்ட 2 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். அப்போது ஸ்ரீநிவாஸ் என்ற பெயரை உச்சரித்ததும் மொத்த அரங்கமே ஸ்ரீநிவாஸ் என்று முழக்கமிட்டு அதிர்ந்தது. இதையடுத்து 250 பேர் ரத்ததானம் செய்தனர். இந்த ஆண்டுவிழா வொண்டர் புக் ஆப் ரெக்கார்ட்சில் அங்கீகரிக்கப்பட்டு விருது வழங்கப்பட்டது.

Related Stories: