நேஷனல் ஹெரால்டு வழக்கு; குற்றப்பத்திரிகை மீதான விசாரணை ஒத்திவைப்பு

புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு செய்தித்தாளை வெளியிட்ட அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.2ஆயிரம் கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துக்களை மோசடியாக கையகப்படுத்தியதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர் சோனியாகாந்தி ராகுல்காந்தி, மறைந்த மோதிலால் வோரா மற்றும் ஆஸ்கார் பெர்ணான்ட்ஸ், சுமன் துபே, சாம் பிட்ரோடா ஆகியோரும் யங் இந்தியன் தனியார் நிறுவனமும் சதி மற்றும் பணமோசடி செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீர் வழக்கு பதிவு செய்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகின்றது.

இந்த வழக்கில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கையை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு சிறப்பு நீதிபதி விஷால் கோன்னே முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, அமலாக்கத்துறை இயக்குனரகத்திடம் இருந்து சில விளக்கங்கள் தேவைப்படுதாக கூறி வழக்கு விசாரணை அக்டோபர் 30ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Related Stories: